வாழ்க்கையை வாழுங்கள்
வாழ்கைக் கல்வி
(சீக்ஷா வல்லி)
'சீக்ஷா' (அதாவது சீக்ஷா)என்றால் கல்வி; 'வல்லீ என்றால் பகுதி . கல்விபற்றி சிறப்பாக கூறுவதால் இந்தப்பகுதி 'சீக்ஷா வல்லி' என்று அழைக்கப்படுகிறது.
மனிதனுக்கு இரண்டு வகையான தேவைகள் உள்ளன. உணவு, உடை, தங்கும் இடம் போன்றவை முதல் வகை; இவை அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றால் மட்டும் அவனால் திருப்தியுற்று நின்றுவிட முடிவதில்லை. அன்பு வேண்டும், ஆற்றல் வேண்டும், இன்பம்வேண்டும்,அறிவு வேண்டும், இறைவனை நாடவேண்டும். இவ்வாறு எத்தனையோ வேண்டியுள்ளன. ஒரு கோணத்தில் பார்கும்போது, அடிப்படைத் தேவைகளை விட இவை முக்கியமானவை. இவை வாழ்கைத் தேவைகள்() இந்த இரண்டு வகைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் துணை செய்கிற கல்வியே முழுக்கல்யாக முடியும். அத்தகைய கல்வியையே நாம் வாழ்கைக் கல்வி என்கிறோம்.
பிராத்தனை
உபநிஷதம் காட்டும் வாழ்கைக் கல்வியின் முதல் அம்சம் பிராத்தனை. உயர்ந்த எதையும் சாதிப்பதற்கு பிரார்தனை பூர்பமான
வாழ்கை தேவை. இயர்கையை அணுகும்போதும் சரி, இறைவனை நாடும் போதும் சரி, பணிவுடனும் பிரார்தனையுடனும் முயற்சிகளைச் செய்தால் பாதை சுலபமாகிறது. வாழ்கையை அணுகுகின்ற இந்த உபநிஷதமும் பிரார்தனையுடன் தொடங்குகிறது.
No comments:
Post a Comment