எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாது. எந்தகாரியத்தைச்செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும்,
நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது.
அதுபோல் அனுபூதிக்கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணரமுடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும் அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
மரணத்திற்குப் பின்னால்
கட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம்
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.
குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிராத்திக்கிறது.
வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுபெறுவதை காணலாம்.
சாந்தி என்றால் அமைதி.
மூன்று முறை சாந்தி: சாந்தி: சாந்தி: என்றுவதன் சொல்காரணங்கள், மூன்று விதமான தடைகளிலிருந்து விலகுவதற்கு.
1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை: உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.
ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவைகளால் வரும் தடை.
மூன்று முறை ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று சொல்வதன் மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு இந்த உபநிஷத்தைப் படிப்பதற்கான நமது முயற்ச்சி வெற்றி பெறுவதற்காக பிராத்திக்கிறோம்.
1. முன்னொரு காலத்தில் வாஜசிரவஸ் என்பவர் பலனில் ஆசை கொண்டவராய் தன்னிடமுள்ள எல்லாப்பொருட்களையும் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதன் என்று மகன் இருந்தான்.
2. தட்சிணைகள் எடுத்துச் செல்வதை குமாரன் நசிகேதன் கண்டான். சிரத்தை அவனை வந்தடைந்து. அவன் சிந்திக்கலானான்.
சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை என்று பொருள். நம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு சும்மா இருபதல்ல; அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது, அந்த நம்பிக்கையின் லட்சியத்தை அடையப் பாடுபடுவது அதுவே சிரத்தை. உயர் லட்சியத்தை அடைவதர்கான எல்லா முயற்சிகளுக்கும் சிரத்தை தேவை. சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. இதயத் தாகத்தால் அது அடையப்படுகிறது. அந்த சிரத்தை நசிகேதனிடம் வந்தது.
3.தண்ணீர் குடித்து முடித்த, புல்மேய்ந்து முடித்த, பால் கறந்து முடித்த, கன்று போடும் சக்தியை இழந்த பசுக்களைத் தானம்செய்பவர்கள் மகிழ்சி இல்லாத உலகங்களை அடைகிறார்கள்.
ஒருவனிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையை வைத்து அவனது செல்வாக்கை அந்த நாட்களில் மதிப்பிட்டார்கள். எனவே பசுக்களைத் தானம் செய்வது தானங்களில் சிறந்தது ஒன்றாகக் கருதப்பட்டது. விசுவஜித் யாகத்தின் முடிவில் அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். ஆனால் வாஜசிரவஸ் தனக்கு உதவாத கிழட்டு பசுக்களை கொடுத்ததார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்லாமல், தானத்தின் அடிப்படைக் கருத்தை சரியாகக் கடைப்பிடிக்காதலால் இரட்டைத் தவறுகளுக்கு உள்ளானார் . வாஜசிரவஸ் அதற்குத் தண்டனையாக மகிழ்சியற்ற உலகங்களில் வாழவும் நேருமென்பதை புரிந்துகொண்ட நசிகேதன் ஆழ்த சிந்தனைக்கு வசப்பட்டான்.
தந்தை செய்யும் தவறை மறைமுகமாக சுட்டிக்காட்டும் நோக்கத்துடன் நசிகேதன் அவரிடம் சென்று கூறினான்.
4. நசிகேதன் தந்தையிடம் சென்று அப்பா என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான் . இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்கு தந்தை உன்னை யெமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று கூறினார்.
தந்தை தவறு செய்வதை கண்டு ஆழ்ந்து சிந்தித்த நசிகேதன், அவர் செய்யும் தவறிலிருந்து காப்பாற்றுவது தனது கடமை, அதனலிருந்து காப்பாற்றி, அவர் மகிழ்சியற்ற உலகங்களை அடையாமல் தடுப்பது தனது கடமை என்று உணர்ந்தான். சிறுவனான தான் நேரடி யாக நீங்கள் செய்வது தவறு என்று கூறினால் அதிகப் பிரச்சனை ஆகிவிடும் என்று கருதி மறை முகமாக அவருக்கு விசயத்தை தெளிவுபடுத்த எண்ணினான்.
சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது யாகத்தின் நிபந்தனை. ஒரு தந்தைக்கு நல்ல மகனைவிடச் சிறந்த செல்வம் இல்லை எனவே என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்? என்று வாஜசிரவசிடம் கேட்டான். இதன்மூலம், சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே! என்று அவருக்கு நினைவூட்டினான்.
நசிகேதனின் இந்தக் கேள்வியை முதலில் வாஜசிரவஸ் பொருட்படுத்தவில்லை. ஆனால் நசிகேதன் விடவில்லை. தந்தையை அணுகி மீண்டும் கேட்டான். அதற்கும் வாஜசிரவஸ் பதில் சொல்லவில்லை. எனவே மூன்றாம் முறையாகக் கேட்டான். அதனால் கோபமுற்ற வாஜசிரவஸ் உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன். அதாவது செத்துத்துலை என்று ஆத்திரத்துடன் கூறினார்.
நசிகேதனின் சுயமதிப்பு
தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், தான் எமனிடம் போயே ஆகவேண்டும் என்பதை நிச்சயித்துக் கொண்டான், நசிகேதன். ஆனால் போகுமுன் அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அவன் அவரிடம் கூறினான்.
6. முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்போது உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துபாருங்கள். செடி கொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.
வாழ்கையில் அனுபவங்கள் பெரிய வழிகாட்டிகள். நமது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தீ சுடும் என்பதை நாமே அனுபவித்து பார்கவேண்டியதில்லை, பிறருடைய அனுபவத்திலிருந்து அதை புரிந்து கொள்ளலாம். அதுபோல் பிறருடைய அனூபவங்களிலிருந்து உண்மையை கற்றுக்கொள்ளுமாறு வாஜசிரவஸிடம் கூறுகிறான் நசிகேதன். நல்லவர்கள் இவ்வாறு தானம் செய்யவில்லை, அப்படிச்செய்தவா்கள் மகிழ்சியற்ற உலகங்களை அடையாமலும் இல்லை, எனவே உண்மையாக நடந்துகொள்ளுங்கள். என்று தந்தைக்கு அறிவுறுத்துகிறான் நசிகேதன். அதுமட்டுமல்ல தன்னை எமனுக்கு கொடுப்பதாக தந்தை ஆத்திரத்திலோ கோபத்திலோ சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட வேண்டும், தான் எமனிடம் போயே ஆகவேண்டும் என்று எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டான் நசிகேதன். அவனுக்கு தந்தையிடம் வருத்தமோ கோபமோ வரவில்லை. என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும்.
பிறகு, நசிகேதன் எமலோகம் போவதான தன்முடிவைத் தந்தையிடம் கூறினார். ஆத்திரத்தில், தான்செய்து விட்டதை எண்ணிய வாசிரவஸ் கவலையில் ஆழ்ந்தார். அதைக் கண்ட நசிகேதன் அவருக்கு வாழ்கையின் உண்மையை எடுத்துக் கூறினார். வாழ்கை நிலையற்றது. மனிதன் செடி கொடிகளைப்போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறார்கள்.
பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும், உறுதி. எனவே நான் எமலோகம் போவதுபற்றி கலங்கவேண்டாம், என்றுநசிகேதன், தந்தையிடம் கூறிவிட்டு, எமலோகம் சென்றார் .
நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை. எனவே அவர் எமதர்மனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது. அதன்பிறகே எமதர்மன் வந்தார். அவரது மந்திரிகள் அவரிடம் சென்று நசிகேதன் வந்து காத்திருப்பதைபற்றி கூறினார்கள்.
7. தூயவ ஒருவர் விருந்தினராக வரும்போது நெருப்புபோலவே நுழைகிறார்கள். நல்லவர்கள் அவர்களுக்கு தண்ணீர் முதலானவற்றைக் கொடுத்து உபசரித்து அவர்களை அமைதிப்படுத்துகின்றனர்.
விருந்தினர் என்பவர் வழிபாட்டுக்குாியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே, அந்த நிலையில் அவர் போற்றப்படவேண்டும். விருந்தினரை உபசரித்தல் என்பது ஒருகாலத்தில் வழிபாட்டாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்தத்துவத்தை இங்கே மந்திாிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.
8. யாருடைய வீட்டில் தூயவர் ஒருவர் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பபுத்தி யுடையவரான அவரது நம்பிக்கைகள், எதிர்பார்புக்கள் எல்லாம் அழிகின்றன. தான்செய்த புண்ணியங்களின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறார். அவரது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.
தூயவர் ஒருவர் வீட்டிற்கு வந்தால் அவரை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்துகிறது. உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப்பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பதை உணர்த்தப்படுகிறது.
மந்திரிகள் கூறியதை கேட்ட எமதர்மன் நேராக நசிகேதனிடம் சென்று அவரை உபசரித்தார்.
9. வழிபாட்டிற்கு உாியவரே! விருந்தாளியும் வணங்கத் தக்கவருமான நீர் உணவின்றி என்வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்தது. தூய பாலனே! அந்த குற்றம் என்னை பாதிக்காமல் எனக்கு நன்மை உண்டாகட்டும். உனக்கு வணக்கம். நீர் மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக என்னிடமிருந்து மூன்று வரங்களை பெற்றுக்கொள்ளும்.
நசிகேதன் கேட்டது
முதல் வரம் தந்தை நலம்(10 - 11)
10. எமதர்மனே! உங்களிடம் இருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய வாஜசிரவஸ் புரிந்துகொள்ள வேண்டும். என்னை ஏற்றுக் கொண்டு மனக்கவலை அற்றவராக என்னிடம் பேசவேண்டும். மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்.
எமனைச் சந்தித்து வருகின்ற இவர் ஆவியல்ல, என் மகன்தான் என்று வாஜசிரவஸ் புரிந்து கொள்ள வேண்டும், தான் ஒரு தவறு செய்ததாகக் கோபம் கொண்ட அவர் இப்போது அந்தக்கோபத்தை விட்டிருக்க வேணடும். சுருக்கமாகச் சொன்னால், என் தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் . அதை நசிகேதன் முதல் வரமாகக் கேட்டார்.
11. அருணனின் மகனும் உனது தந்தையுமாகிய உத்தாலகர் உம்மைக்காணும்போது முன்பு போலவே உம்மைப்புாிந்து கொள்வார். என் அருளால் இரவுகளில் கவலையற்று தூங்குவார். என்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற உம்மைக் கண்டு கோபம் கொள்ளமாட்டார். என்றுகூறி முதல் வரத்தை அளித்தார் எமதர்மன்.
12. சொர்கத்தில் சிறிதும் பயம் கிடையாது. மரண தேவனாகிய நீங்களும் அங்கில்லை. அங்கே மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்கு பசி, தாகம் இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்சியில் திளைத்திருக்கிறார்கள்.
13. எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையை பெறுகின்றனர். அங்கே அழைத்து செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல்ல. இதனை இரண்டாவது வரமாகக்கேட்கிறேன்.
மனிதனுக்கு இன்ப நுகர்ச்சியிலுள்ள நாட்டம் முடிவற்றது, ஆயுளோ குறைவு. எனவே இங்கே கிடைக்காத, இங்கே பூர்தி செய்ய முடியாத இன்பங்கள் வேறோர் உலகத்தில் இருப்பதாகக் கொண்டு, அங்கே சென்று தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர நினை்கிறான் மனிதன். இதன்விளைவாக எழுந்தது சொர்கம் என்ற கருத்து. எல்லா புராணங்களிலும் இந்த கருத்து இருப்பதை காணலாம். பசி, தாகம் மூப்பு, அனைத்திற்கும் மேலாக மரணம் போன்றவை சுகபோகங்களுக்கு தடையாக உள்ளன. எனவே அந்தத்தடைகள் இல்லாத உலகமாக சொர்கத்தைக் கருதினார்கள் மனிதர்கள்.
நசிகேத வித்யை
வாழ்வில் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தை நாடினான் மனிதன். சொற்கத்திற்குப் போவதற்கென்றும் யாகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றைபற்றி எமதர்மனிடம் இரண்டாவது வரமாக நசிகேதன் கேட்கிறான்.
யாகங்கள் புறத்தில் செய்யப்படுபவை. சில பொருட்களைக் கொண்டு புறத்தில் செய்யப்படுகின்ற கிரியைகள் புண்ணியத்தை தரலாம், ஆனால் அக(body and mind) வளர்சியை தருமா, அனுபூதி (Realization (உணர்தல்)) யைத்தருமா. என்றகேள்வி எழுந்தது. அகப் பயிர்சிகளே அக வளர்சியை தரமுடியும் என்ற கருத்து வலுப்பெற்றது. யாகங்கள் அகமுகமாக்கப்பட்டன. வித்தைகள் உருவாகின. இந்த மந்திரத்தில் யாகம் வித்யையாக பாிணமிப்பதை காண்கிறோம்.
14. நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைபற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்கு சொல்கிறேன் விழிபபுற்றவனாகக் கேள். சொர்கத்தை தருவதும் , பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக்குகையில் உள்ளது.
15.நசிகேத யாகத்தை மும்முறை செய்தவர்கள் மூவருடன் தொடா்பு கொண்டு மூன்று பயிற்சிகளைச் செய்யும்போது பிறப்பையும் இறப்பையும் கடக்கிறார்கள். பிரம்மத்திலிருந்து தோன்றியவரும் வழிபடத் தகுந்தவருமாான இறைவனை அறிந்து அனுபவித்து நிலைத்த அமைதியைப் பெறுகிறார்கள்.
நசிகேதனின் இரண்டாவது வரம் சொற்கத்திற்குப் போவதற்கான வழி பற்றியது. அந்த வழி நசிகேத யாகம். அந்தப் புற யாகத்தை சில நிபந்தனைகளுடன் செய்தால் அதுவே ஓர் அகப் பயிற்சியாக, ஒரு வித்தையாக இறை நெறியில் நம்மைச் சேர்க்கும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிபந்தனைகள் என்னென்ன
1. மூவருடன் தொடர்பு:தாய், தந்தை, குரு ஆகிய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அரவணைப்பு, உலக விசயங்களில் தந்தையின் வழிகாட்டுதல், அகவாழ்கையில் தகுந்த குருவின் வழிநடத்தல் ஆகிய மூன்றும் உரிய வேளையில் சரியாகக் கிடைப்பவர்களின் வாழ்கை வெற்றிகரமானதாக அமைகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. எனவே இந்த மூவரின் ஆசிகளால் வாழ்கை நிறைவு பெற்றவர்களாக இருக்க வேணடும் .
இந்த மூவரின் தொடர்பால் ஒருவர் இறைவனை அறிகிறார். அதாவது இறைவன் ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதே வாழ்க்கையின் நோக்கம் என்பது அவருக்கு தெரியவருகிறது. இதனையே(விதித்வா - அறிந்து)என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. ஆனால் அப்படி அறிவது மட்டும் போதாது. அனுபூதியில் (Realization( உணர்தல்)) இறைவனை உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும் இதனை மந்திரத்தில் (நிசாச்ய - அனுபவித்து) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதற்கான பயிர்ச்சிகள் எவை.
2. மூன்று பயிற்சிகள்: தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம். இதனை மூன்று பயிற்சிகள் அல்லது மூன்று கர்மங்கள் என்று கூறலாம்.
சொந்தத் தேவைகளைச் சுருக்கிக் கொள்வதும், தனது வாழ்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வண்ணம் வாழ்வது தவம்.
நல்ல நூல்களைப் படித்தல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல், மந்திர ஜபம், சுய ஆராச்சி போன்றவை ஸ்வாத்யாயம்.
இறைவனை வழிபடுவதும், அவரைச் சரணடைந்து வாழ்வதும் ஈசுவர ப்பிரணிதானம்.
இவ்வாறு மூவரின் தொடர்புடன் மூன்று பயிற்சிகளை செய்பவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவன் யார்?
பிரம்மத்திலிருந்து தோன்றியவர். உருவமற்ற, குணங்களற்ற அறுதி நிலையில் இறைவன் பிரம்மம் என்று வழங்கப்படுகிறார். சாதரண மனிதர்கள் புரிந்து கொள்ளத் தக்க நிலையில் குறிப்பிட்ட வடிவத்துடனும் குணங்களுடனும் இருக்கின்ற நிலையில் இறைவன், சிவன்,விஷ்ணு, தேவி என்று பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இந்த நிலையிலுள்ள இறைவனை அவர்கள் அடைகிறார்கள்.
இறைவனைத் தவிர வேறு எதன் மூலமும் கிடைக்கின்ற அமைதியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதி காரணம் விலகியதும் குலைந்து விடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி, எதனாலும் குலையாது.
(மூவருடன் தொடர்பு தாய், தந்தை, குரு. மூன்று பயிற்சிகள் தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம்) மூன்றையயும் அறிந்து யார் நசிகேத யாகத்தை செய்கிறானோ, அவன் உடல் விழு முன்பே மரணத்தை வென்று, கவலைகளை கடந்து சொர்க லோகத்தில் மகிழ்திருக்கிறான்.
நசிகேத யாகத்தை ஒரு வித்தையாகச் செய்யுமாறு இந்த சுலோகம் வலியுறுத்துகிறது. வெறுமனே நசிகேத யாகத்தை செய்வதால் சொர்கலோக்திற்கு செல்கிறான். மூன்றையும் அறிந்து நசிகேத வித்தையைச் செய்பவன் மரணத்தை வெல்கிறான்.
உடல் விழும் முன்பே, அதாவது வாழும்போதே மரணத்தை வெல்வது என்றால், மனிதர்கள் அறியாமையிலுருந்து விடுபடுகிறார்கள். ஆசை வெறுப்பு போன்ற உணர்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்கிறார்கள். அறியாமை, ஆசை போன்றவற்றில் வசப்ட்டு நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம்மை உலகுடன் பிணைக்கிறது. தொடர்ந்து பிறவிக்கு வழியாகிறது. ஆசையோ வெறுப்போ அற்றவர்களாக வாழும்போது பிறவியற்றுப்போவதால் அது மரணத்தை வென்ற வாழ்கை ஆகிறது.
18.நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற எந்த யாகத்தைப்பற்றி கேட்டாயோ அதை உனக்குச் சொன்னேன். இந்த யாகத்தை மக்கள் இனி உன்பெயராலே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தை கேள்.
இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது.
19. மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகின்றனர். இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.
21.இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறியமுடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபசேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.
நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயர்ச்சி
22. நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றை கேள். பூமியில் பரந்த அரசை கேள். நீ எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்து கொள்.
23. நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக்கேள். செல்வம் , நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எது வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும் அனுபவிப்பவனாகச் செய்கிறேன்.
24. நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அனைத்தையும் கேள். சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீவேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தை மட்டும் கேட்காதே.
25. மரணதேவனே! நீங்கள் கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீங்கள் சொன்ன குதிரைகள்,ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உம்மிடமே இருக்கட்டும்.
உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள்வரும். அது மட்டும் அல்ல, இன்பங்களை அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகியது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது. உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்தவேண்டும். இதனை அறிந்து கொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்து விட்டான் நசிகேதன்.
26.மனிதன் பணத்தாால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்தால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீங்கள் ஆளும்வரை என்னுடைய ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எனக்கு வேண்டாம். நான் கேட்க தக்க வரம் இது ஒன்றே (மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகின்றனர். இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்). நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.
பத்து டொலர் அல்லதுபத்து ரூபாய் கிடைத்தால் போதும் என்று தோன்றும். நூறு கிடைத்தால் ஆயிரம் போதும் என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்து கொண்டே செல்லும் பணத்தின் மீது உள்ள ஆசை. ஆசை ஒரு சங்கிலி . பொதுவாக பணம் மட்டும்மல்ல உலக இன்பங்கள் எதிலும் திருப்தி வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும். திருப்தி கிடைக்கப் போவதில்லை. எனவே அதை நாடிப் பயனில்லை. புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவருடைய ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவரே அளித்துள்ளார். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை.
அதனால், மரணத்தைப்பபற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அதுமட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.
27. மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன். எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில் நான் ஆசை வைப்பேனா?
தேவர்கள் மூப்பற்றவர்கள், மரணமற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதாவது நம்முடன் ஒப்பிடும்பபோது அவர்கள் இன்னும் நீண்டகாலம், மிக நீண்டகாலம் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களும் அத்தக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகியே தீரவேண்டும். உங்ககளை அடைந்து உண்மையை அ்றிந்து கொண்டேன். ( என்று கூறுவதை இதைத்தான்.) தேவர்களே ஒருநாள் மரணத்தைத் தழுவவேண்டுமானால் மனிதனின் ஆயுள் எவ்வளவு சிறியது! அதனை இந்த நிலை அற்ற உலகங்களில் செலவிடுவேனா? என்பது நசிகேதனின் கேள்வி. மரணத்திற்கு பின்னால் என்ன உள்ளது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறார் அவர்.
28.மரணதேவனே! எந்த விசயத்தில் இந்த சந்தேகம் நிலவுகிறதோ, மறு உலக விசயத்தைப் பற்றி அறிய எதனை அறிந்தால் பெரும்பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிகரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ , அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்.
இவ்வாறு கட உபநிஷத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதி நிறைவு பெறுகிறது.
மூன்று வரங்கள் ஒருகண்ணோட்டம்
நசிகேதன்
உயர் உண்மைகளை நாடுபவர்களுக்கு நசிகேதன் கதை ஒரு கலங்கரை விளக்கம். அவர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள் நசிகேதனின் மூலம் வெளிப்படுத்தப் படுகின்றன.
முதலாவதாக சிரத்தை (2. தட்சிணைகள் எடுத்துச் செல்வதை குமாரன் நசிகேதன் கண்டான். சிரத்தை அவனை வந்தடைந்து. அவன் சிந்திக்கலான்) வெறும் நம்பிக்கைமட்டும் அல்ல, அந்த நம்பிக்கையை சாதிக்கின்ற செயல்திறன்.
இரண்டாவதாக சுய மதிப்பு (5. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறார் என்று சிந்தித்தான் நசிகேதன்.)தனது மதிப்பு நசிகேதனுக்கு நன்றாகத் தெரிந்ததிருந்தது. அதாவது, தன்னைப்பற்றி அவன் அறிந்திருந்தான். சிரத்தை மிக்கவனான எனக்கு சொல் என்று (13. எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையை பெறுகின்றனர். அங்கே அழைத்து செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல்ல. இதனை இரண்டாவது வரமாகக்கேட்கிறேன்.) அவன் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சிரத்தை உள்ளவர்களிடம் சொன்னால் அது வீண்போகாது. ஏனெனில் அதை அவர்கள் செயல்படுத்துவார்கள். தன்னால் செயல்படடுத்த முடிந்ததையே அவர்கள் கேட்பார்கள், கேட்டதை செயல்படுத்துவார்கள். நசிகேதன் சொல்லுகிறான், எமதரமன் சொல்வதைக் கடைபிடிக்கின்ற திறமை தன்னிடம் இருப்பதை உணர்திருந்தான் நசிககேதன். இதுவவேதான் சுயமதிப்பு என்பது.
அதுமட்டுமின்றி, செல்வம் பதவி பெண் என்று பலவிசயங்களை காட்டி திசைதிருப்ப எமதர்மன் முயற்சித்தபோது (இந்த இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன் நான்(27மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன் எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில் நான் ஆசை வைப்பேனா) என்று தைரியமாகக் கூறுகிறான் நசிகேதன். தன்னைப்பற்றி அவன் உயர்ந்த மதிப்பு வைத்திருந்தான் என்பதையே காட்டுகிறது.
சுயமதிப்பை ஆணவத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்டிக்கொள்வதும், பலவீனங்களை மறைப்பதற்காக போடும் முகமூடியே ஆணவம். சுயமதிப்பு என்பது தன்னிடம் இருப்பதைப் புரிந்து கொள்வது. ஆணவம் பிறரைக் கீழாகப் பார்கும், சுயமதிப்பு அனைவரையும் சமமாகப் பார்கும்.
எனவே தன்னறிவு (self knowledge) அதன் விளைவாக வருகின்ற சுயமதிப்பு இரண்டும் உயர்வாழ்கைக்கு மிகவும் இன்றியமையாது.
அடுத்தது உண்மையை ஏற்றுக் கொள்ளல் (openness to reality). வாசிரவஸ் நசிகேதனை மரண தேவனிடம் அனுப்பத் துணிந்த போதும் கோபமோ ஆத்திரமோ அடையாமல் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆழ்ந்து சிந்திக்கிறான் அவன். (5,. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறாா் என்று சிந்தித்தான் நசிகேதன். 6. முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்போது உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துபாருங்கள். செடி கொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.). சூழ்நிலை கொண்டு வருபவற்றை, அவை நல்லவையானாலும் கெட்டவையானாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உயர் உண்மையை நாடுபர்கள் ஒருபோதும் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யக் கூடாது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும், உடனே மனத்தை உள்ளே திருப்பி அதனை அக(body and mind) வளர்சிக்கான ஒரு படியாக மாற்றும் திறமைவேண்டும்.
அடுத்தது துணிச்சல் (10) எமனையே நேரே சந்திக்கும் துணிச்சலை நசிகேதனிடம் காண்கிறோம். பாதையில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனையும் எதிர்கொண்டு, தான் லட்சியமாக கொண்டதைச் சாதிப்பதற்கான துணிச்சல், உண்மையை நாடுபவர்களிடம் துணிச்சல்வேண்டும்.
கடைசியாக ஆசையின்மை(28.மரணதேவனே! எந்த விசயத்தில் இந்த சந்தேகம் நிலவுகிறதோ, மறு உலக விசயத்தைப் பற்றி அறிய எதனை அறிந்தால் பெரும்பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிகரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம். ) உயர் உண்மையை நாடுபவர்களிடம் உலகைப்பற்றிய, அதன் சுகபோகங்களைப் பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுடைய லட்சியத்தை அடைய முடியும். உலகம் அதன் சுககபோகங்கள் என்றால் என்ன? அவற்றிற்கு எந்தளவில் இடம் கொடுக்கவேண்டும், என்பது மிகமுக்கியமானது ஒன்று. உலகின் சுகங்கள் அத்தனையயையும் எமதர்மன் கொடுத்த பிறகும் நசிகேதன் அவற்றை உதறிவிட்டு, லட்சியத்திலேயே குறியாக இருக்கிறான். ஏனெனில் அந்த சுகபோகங்களின் நிலையாமையை அவன் சிந்தித்து அறிந்திருந்தான் (27. மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன் எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில் நான் ஆசை வைப்பேனா?). எனவே உண்மையை நாடுபவனுக்கு உலகின் கவர்ச்சிகள் எதனாலும் நிலைகுலையாத மனம் வேண்டும்.
நசிகேதன் எமதர்மனிடம் கேட்கின்ற மூன்று வரங்களில் ஒரு தெளிவான, படிப்படியான லட்சிய நாட்டத்தை காண்கிறோம். உயர் வாழ்க்கையை, ஆன்மீக வாழ்க்கையை நாடுகிறோம் என்பதற்காக உலகின் உண்மையையோ சமுதாய உறவுகளையோ தூக்கி எறியவேண்டும் என்பதில்லை.
நசிகேதனின் முதல்வரம் தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. இது குடும்பத்தில் ஒரு நல்ல உறவு நிலவவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. பெற்றோருடனும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சரியான உறவு நிலவ வேண்டும்.
இரண்டாம் வரம் யாகம் பற்றியது. யாகங்களின் மூலம் இயற்கைை சக்திகளுடன் நாம் தொடர்புகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை இயற்கை சக்திகளின் மூலம் சாதித்துக் கொள்கிறோம். அதாவது, இயற்கையைப் பேணுதல், சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ நாம் கற்றிருக்க வேண்டும்.
குடும்பத்துடனும் சமுதாயாத்துடனும் இயற்கையுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டே உயர் ஆன்மீக உண்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இந்த மூன்று வரங்களும் நமக்கு காட்டுகின்றன.
நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது.
அதுபோல் அனுபூதிக்கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணரமுடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும் அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
மரணத்திற்குப் பின்னால்
கட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம்
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.
குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிராத்திக்கிறது.
வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுபெறுவதை காணலாம்.
சாந்தி என்றால் அமைதி.
மூன்று முறை சாந்தி: சாந்தி: சாந்தி: என்றுவதன் சொல்காரணங்கள், மூன்று விதமான தடைகளிலிருந்து விலகுவதற்கு.
மூன்று விதமான தடைகள் வருமாறு.
1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை: உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.
ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவைகளால் வரும் தடை.
மூன்று முறை ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று சொல்வதன் மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு இந்த உபநிஷத்தைப் படிப்பதற்கான நமது முயற்ச்சி வெற்றி பெறுவதற்காக பிராத்திக்கிறோம்.
அத்தியாயம் 1
நசிகேதனின் தந்தை செய்த யாகம்
1. முன்னொரு காலத்தில் வாஜசிரவஸ் என்பவர் பலனில் ஆசை கொண்டவராய் தன்னிடமுள்ள எல்லாப்பொருட்களையும் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதன் என்று மகன் இருந்தான்.
தானப் பொருட்களைக் கண்ட நசிகேதனின் சிந்தனை
சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை என்று பொருள். நம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு சும்மா இருபதல்ல; அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது, அந்த நம்பிக்கையின் லட்சியத்தை அடையப் பாடுபடுவது அதுவே சிரத்தை. உயர் லட்சியத்தை அடைவதர்கான எல்லா முயற்சிகளுக்கும் சிரத்தை தேவை. சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. இதயத் தாகத்தால் அது அடையப்படுகிறது. அந்த சிரத்தை நசிகேதனிடம் வந்தது.
நசிகேதனின் சிந்தனைக்கான காரணம்
ஒருவனிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையை வைத்து அவனது செல்வாக்கை அந்த நாட்களில் மதிப்பிட்டார்கள். எனவே பசுக்களைத் தானம் செய்வது தானங்களில் சிறந்தது ஒன்றாகக் கருதப்பட்டது. விசுவஜித் யாகத்தின் முடிவில் அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். ஆனால் வாஜசிரவஸ் தனக்கு உதவாத கிழட்டு பசுக்களை கொடுத்ததார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்லாமல், தானத்தின் அடிப்படைக் கருத்தை சரியாகக் கடைப்பிடிக்காதலால் இரட்டைத் தவறுகளுக்கு உள்ளானார் . வாஜசிரவஸ் அதற்குத் தண்டனையாக மகிழ்சியற்ற உலகங்களில் வாழவும் நேருமென்பதை புரிந்துகொண்ட நசிகேதன் ஆழ்த சிந்தனைக்கு வசப்பட்டான்.
நசிகேதன் தந்தைக்கு உண்மையை அறிவுறுத்துதல்
4. நசிகேதன் தந்தையிடம் சென்று அப்பா என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான் . இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்கு தந்தை உன்னை யெமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று கூறினார்.
தந்தை தவறு செய்வதை கண்டு ஆழ்ந்து சிந்தித்த நசிகேதன், அவர் செய்யும் தவறிலிருந்து காப்பாற்றுவது தனது கடமை, அதனலிருந்து காப்பாற்றி, அவர் மகிழ்சியற்ற உலகங்களை அடையாமல் தடுப்பது தனது கடமை என்று உணர்ந்தான். சிறுவனான தான் நேரடி யாக நீங்கள் செய்வது தவறு என்று கூறினால் அதிகப் பிரச்சனை ஆகிவிடும் என்று கருதி மறை முகமாக அவருக்கு விசயத்தை தெளிவுபடுத்த எண்ணினான்.
சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது யாகத்தின் நிபந்தனை. ஒரு தந்தைக்கு நல்ல மகனைவிடச் சிறந்த செல்வம் இல்லை எனவே என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்? என்று வாஜசிரவசிடம் கேட்டான். இதன்மூலம், சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே! என்று அவருக்கு நினைவூட்டினான்.
நசிகேதனின் இந்தக் கேள்வியை முதலில் வாஜசிரவஸ் பொருட்படுத்தவில்லை. ஆனால் நசிகேதன் விடவில்லை. தந்தையை அணுகி மீண்டும் கேட்டான். அதற்கும் வாஜசிரவஸ் பதில் சொல்லவில்லை. எனவே மூன்றாம் முறையாகக் கேட்டான். அதனால் கோபமுற்ற வாஜசிரவஸ் உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன். அதாவது செத்துத்துலை என்று ஆத்திரத்துடன் கூறினார்.
நசிகேதனின் சுயமதிப்பு
5. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறாா் என்று சிந்தித்தான் நசிகேதன்.
நசிகேதனிடம் நாம் காணும் ஒரு முக்கிய பண்பு: சுய மதிப்பு. தன்னை, வாழ்கையில் தனது இடத்தை, தனது குறை நிறைகளை நன்றாக அறிந்து வைத்திருந்தான். எனவே அவன் பலவிஷயங்களில் முதல் நிலையில் உள்ளேன், பல விசயங்களில் இடை நிலையில் உள்ளேன். ஆனால் எதிலும் கடை நிலையில் இல்லை. அவன் துணிச்சலாக தன்னை மதிப்பிடுகிறான். அப்படியான என்மீது தந்தை ஏன் ஆத்திரப்படுகிறார்? எதற்காக நான் அவரிடம் இதை சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளாமல், என்னை எமனிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டாரே! என்று ஆதங்கப்படுகிறான்.நசிகேதன் தந்தையிடம் சிந்திக்குமாறு கூறியது
6. முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்போது உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துபாருங்கள். செடி கொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.
வாழ்கையில் அனுபவங்கள் பெரிய வழிகாட்டிகள். நமது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தீ சுடும் என்பதை நாமே அனுபவித்து பார்கவேண்டியதில்லை, பிறருடைய அனுபவத்திலிருந்து அதை புரிந்து கொள்ளலாம். அதுபோல் பிறருடைய அனூபவங்களிலிருந்து உண்மையை கற்றுக்கொள்ளுமாறு வாஜசிரவஸிடம் கூறுகிறான் நசிகேதன். நல்லவர்கள் இவ்வாறு தானம் செய்யவில்லை, அப்படிச்செய்தவா்கள் மகிழ்சியற்ற உலகங்களை அடையாமலும் இல்லை, எனவே உண்மையாக நடந்துகொள்ளுங்கள். என்று தந்தைக்கு அறிவுறுத்துகிறான் நசிகேதன். அதுமட்டுமல்ல தன்னை எமனுக்கு கொடுப்பதாக தந்தை ஆத்திரத்திலோ கோபத்திலோ சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட வேண்டும், தான் எமனிடம் போயே ஆகவேண்டும் என்று எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டான் நசிகேதன். அவனுக்கு தந்தையிடம் வருத்தமோ கோபமோ வரவில்லை. என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும்.
பிறகு, நசிகேதன் எமலோகம் போவதான தன்முடிவைத் தந்தையிடம் கூறினார். ஆத்திரத்தில், தான்செய்து விட்டதை எண்ணிய வாசிரவஸ் கவலையில் ஆழ்ந்தார். அதைக் கண்ட நசிகேதன் அவருக்கு வாழ்கையின் உண்மையை எடுத்துக் கூறினார். வாழ்கை நிலையற்றது. மனிதன் செடி கொடிகளைப்போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறார்கள்.
பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும், உறுதி. எனவே நான் எமலோகம் போவதுபற்றி கலங்கவேண்டாம், என்றுநசிகேதன், தந்தையிடம் கூறிவிட்டு, எமலோகம் சென்றார் .
எமதர்மனிடம் மந்திரிகள் கூறியது
7. தூயவ ஒருவர் விருந்தினராக வரும்போது நெருப்புபோலவே நுழைகிறார்கள். நல்லவர்கள் அவர்களுக்கு தண்ணீர் முதலானவற்றைக் கொடுத்து உபசரித்து அவர்களை அமைதிப்படுத்துகின்றனர்.
விருந்தினர் என்பவர் வழிபாட்டுக்குாியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே, அந்த நிலையில் அவர் போற்றப்படவேண்டும். விருந்தினரை உபசரித்தல் என்பது ஒருகாலத்தில் வழிபாட்டாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்தத்துவத்தை இங்கே மந்திாிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.
8. யாருடைய வீட்டில் தூயவர் ஒருவர் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பபுத்தி யுடையவரான அவரது நம்பிக்கைகள், எதிர்பார்புக்கள் எல்லாம் அழிகின்றன. தான்செய்த புண்ணியங்களின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறார். அவரது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.
தூயவர் ஒருவர் வீட்டிற்கு வந்தால் அவரை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்துகிறது. உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப்பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பதை உணர்த்தப்படுகிறது.
எமதர்மனின் உபசாரம்
9. வழிபாட்டிற்கு உாியவரே! விருந்தாளியும் வணங்கத் தக்கவருமான நீர் உணவின்றி என்வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்தது. தூய பாலனே! அந்த குற்றம் என்னை பாதிக்காமல் எனக்கு நன்மை உண்டாகட்டும். உனக்கு வணக்கம். நீர் மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக என்னிடமிருந்து மூன்று வரங்களை பெற்றுக்கொள்ளும்.
நசிகேதன் கேட்டது
முதல் வரம் தந்தை நலம்(10 - 11)
10. எமதர்மனே! உங்களிடம் இருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய வாஜசிரவஸ் புரிந்துகொள்ள வேண்டும். என்னை ஏற்றுக் கொண்டு மனக்கவலை அற்றவராக என்னிடம் பேசவேண்டும். மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்.
எமனைச் சந்தித்து வருகின்ற இவர் ஆவியல்ல, என் மகன்தான் என்று வாஜசிரவஸ் புரிந்து கொள்ள வேண்டும், தான் ஒரு தவறு செய்ததாகக் கோபம் கொண்ட அவர் இப்போது அந்தக்கோபத்தை விட்டிருக்க வேணடும். சுருக்கமாகச் சொன்னால், என் தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் . அதை நசிகேதன் முதல் வரமாகக் கேட்டார்.
எமதர்மன் வரமளித்தல்
12. சொர்கத்தில் சிறிதும் பயம் கிடையாது. மரண தேவனாகிய நீங்களும் அங்கில்லை. அங்கே மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்கு பசி, தாகம் இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்சியில் திளைத்திருக்கிறார்கள்.
13. எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையை பெறுகின்றனர். அங்கே அழைத்து செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல்ல. இதனை இரண்டாவது வரமாகக்கேட்கிறேன்.
மனிதனுக்கு இன்ப நுகர்ச்சியிலுள்ள நாட்டம் முடிவற்றது, ஆயுளோ குறைவு. எனவே இங்கே கிடைக்காத, இங்கே பூர்தி செய்ய முடியாத இன்பங்கள் வேறோர் உலகத்தில் இருப்பதாகக் கொண்டு, அங்கே சென்று தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர நினை்கிறான் மனிதன். இதன்விளைவாக எழுந்தது சொர்கம் என்ற கருத்து. எல்லா புராணங்களிலும் இந்த கருத்து இருப்பதை காணலாம். பசி, தாகம் மூப்பு, அனைத்திற்கும் மேலாக மரணம் போன்றவை சுகபோகங்களுக்கு தடையாக உள்ளன. எனவே அந்தத்தடைகள் இல்லாத உலகமாக சொர்கத்தைக் கருதினார்கள் மனிதர்கள்.
நசிகேத வித்யை
வாழ்வில் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தை நாடினான் மனிதன். சொற்கத்திற்குப் போவதற்கென்றும் யாகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றைபற்றி எமதர்மனிடம் இரண்டாவது வரமாக நசிகேதன் கேட்கிறான்.
நசிகேத வித்யை
14. நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைபற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்கு சொல்கிறேன் விழிபபுற்றவனாகக் கேள். சொர்கத்தை தருவதும் , பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக்குகையில் உள்ளது.
15.நசிகேத யாகத்தை மும்முறை செய்தவர்கள் மூவருடன் தொடா்பு கொண்டு மூன்று பயிற்சிகளைச் செய்யும்போது பிறப்பையும் இறப்பையும் கடக்கிறார்கள். பிரம்மத்திலிருந்து தோன்றியவரும் வழிபடத் தகுந்தவருமாான இறைவனை அறிந்து அனுபவித்து நிலைத்த அமைதியைப் பெறுகிறார்கள்.
நசிகேதனின் இரண்டாவது வரம் சொற்கத்திற்குப் போவதற்கான வழி பற்றியது. அந்த வழி நசிகேத யாகம். அந்தப் புற யாகத்தை சில நிபந்தனைகளுடன் செய்தால் அதுவே ஓர் அகப் பயிற்சியாக, ஒரு வித்தையாக இறை நெறியில் நம்மைச் சேர்க்கும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிபந்தனைகள் என்னென்ன
1. மூவருடன் தொடர்பு:தாய், தந்தை, குரு ஆகிய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அரவணைப்பு, உலக விசயங்களில் தந்தையின் வழிகாட்டுதல், அகவாழ்கையில் தகுந்த குருவின் வழிநடத்தல் ஆகிய மூன்றும் உரிய வேளையில் சரியாகக் கிடைப்பவர்களின் வாழ்கை வெற்றிகரமானதாக அமைகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. எனவே இந்த மூவரின் ஆசிகளால் வாழ்கை நிறைவு பெற்றவர்களாக இருக்க வேணடும் .
இந்த மூவரின் தொடர்பால் ஒருவர் இறைவனை அறிகிறார். அதாவது இறைவன் ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதே வாழ்க்கையின் நோக்கம் என்பது அவருக்கு தெரியவருகிறது. இதனையே(விதித்வா - அறிந்து)என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. ஆனால் அப்படி அறிவது மட்டும் போதாது. அனுபூதியில் (Realization( உணர்தல்)) இறைவனை உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும் இதனை மந்திரத்தில் (நிசாச்ய - அனுபவித்து) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதற்கான பயிர்ச்சிகள் எவை.
2. மூன்று பயிற்சிகள்: தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம். இதனை மூன்று பயிற்சிகள் அல்லது மூன்று கர்மங்கள் என்று கூறலாம்.
சொந்தத் தேவைகளைச் சுருக்கிக் கொள்வதும், தனது வாழ்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வண்ணம் வாழ்வது தவம்.
நல்ல நூல்களைப் படித்தல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல், மந்திர ஜபம், சுய ஆராச்சி போன்றவை ஸ்வாத்யாயம்.
இறைவனை வழிபடுவதும், அவரைச் சரணடைந்து வாழ்வதும் ஈசுவர ப்பிரணிதானம்.
இவ்வாறு மூவரின் தொடர்புடன் மூன்று பயிற்சிகளை செய்பவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவன் யார்?
பிரம்மத்திலிருந்து தோன்றியவர். உருவமற்ற, குணங்களற்ற அறுதி நிலையில் இறைவன் பிரம்மம் என்று வழங்கப்படுகிறார். சாதரண மனிதர்கள் புரிந்து கொள்ளத் தக்க நிலையில் குறிப்பிட்ட வடிவத்துடனும் குணங்களுடனும் இருக்கின்ற நிலையில் இறைவன், சிவன்,விஷ்ணு, தேவி என்று பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இந்த நிலையிலுள்ள இறைவனை அவர்கள் அடைகிறார்கள்.
அதனால் அடையும் பலன் என்ன? நிலைத்த அமைதி.
(மூவருடன் தொடர்பு தாய், தந்தை, குரு. மூன்று பயிற்சிகள் தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம்) மூன்றையயும் அறிந்து யார் நசிகேத யாகத்தை செய்கிறானோ, அவன் உடல் விழு முன்பே மரணத்தை வென்று, கவலைகளை கடந்து சொர்க லோகத்தில் மகிழ்திருக்கிறான்.
நசிகேத யாகத்தை ஒரு வித்தையாகச் செய்யுமாறு இந்த சுலோகம் வலியுறுத்துகிறது. வெறுமனே நசிகேத யாகத்தை செய்வதால் சொர்கலோக்திற்கு செல்கிறான். மூன்றையும் அறிந்து நசிகேத வித்தையைச் செய்பவன் மரணத்தை வெல்கிறான்.
உடல் விழும் முன்பே, அதாவது வாழும்போதே மரணத்தை வெல்வது என்றால், மனிதர்கள் அறியாமையிலுருந்து விடுபடுகிறார்கள். ஆசை வெறுப்பு போன்ற உணர்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்கிறார்கள். அறியாமை, ஆசை போன்றவற்றில் வசப்ட்டு நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம்மை உலகுடன் பிணைக்கிறது. தொடர்ந்து பிறவிக்கு வழியாகிறது. ஆசையோ வெறுப்போ அற்றவர்களாக வாழும்போது பிறவியற்றுப்போவதால் அது மரணத்தை வென்ற வாழ்கை ஆகிறது.
18.நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற எந்த யாகத்தைப்பற்றி கேட்டாயோ அதை உனக்குச் சொன்னேன். இந்த யாகத்தை மக்கள் இனி உன்பெயராலே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தை கேள்.
மரணத்திற்குபிறகு மனிதனின் நிலை
19. மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகின்றனர். இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.
எமதர்மனின் பதில்
20. நசிகேதா! இந்த விசயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது, எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னை கட்டாயப் படுத்தாதே, விட்டுவிடு.21.இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறியமுடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபசேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.
நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயர்ச்சி
22. நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றை கேள். பூமியில் பரந்த அரசை கேள். நீ எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்து கொள்.
23. நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக்கேள். செல்வம் , நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எது வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும் அனுபவிப்பவனாகச் செய்கிறேன்.
24. நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அனைத்தையும் கேள். சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீவேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தை மட்டும் கேட்காதே.
நசிகேதனின் ஆசையின்மை.
உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள்வரும். அது மட்டும் அல்ல, இன்பங்களை அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகியது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது. உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்தவேண்டும். இதனை அறிந்து கொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்து விட்டான் நசிகேதன்.
26.மனிதன் பணத்தாால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்தால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீங்கள் ஆளும்வரை என்னுடைய ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எனக்கு வேண்டாம். நான் கேட்க தக்க வரம் இது ஒன்றே (மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகின்றனர். இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்). நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.
பத்து டொலர் அல்லதுபத்து ரூபாய் கிடைத்தால் போதும் என்று தோன்றும். நூறு கிடைத்தால் ஆயிரம் போதும் என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்து கொண்டே செல்லும் பணத்தின் மீது உள்ள ஆசை. ஆசை ஒரு சங்கிலி . பொதுவாக பணம் மட்டும்மல்ல உலக இன்பங்கள் எதிலும் திருப்தி வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும். திருப்தி கிடைக்கப் போவதில்லை. எனவே அதை நாடிப் பயனில்லை. புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவருடைய ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவரே அளித்துள்ளார். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை.
அதனால், மரணத்தைப்பபற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அதுமட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.
27. மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன். எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில் நான் ஆசை வைப்பேனா?
தேவர்கள் மூப்பற்றவர்கள், மரணமற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதாவது நம்முடன் ஒப்பிடும்பபோது அவர்கள் இன்னும் நீண்டகாலம், மிக நீண்டகாலம் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களும் அத்தக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகியே தீரவேண்டும். உங்ககளை அடைந்து உண்மையை அ்றிந்து கொண்டேன். ( என்று கூறுவதை இதைத்தான்.) தேவர்களே ஒருநாள் மரணத்தைத் தழுவவேண்டுமானால் மனிதனின் ஆயுள் எவ்வளவு சிறியது! அதனை இந்த நிலை அற்ற உலகங்களில் செலவிடுவேனா? என்பது நசிகேதனின் கேள்வி. மரணத்திற்கு பின்னால் என்ன உள்ளது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறார் அவர்.
28.மரணதேவனே! எந்த விசயத்தில் இந்த சந்தேகம் நிலவுகிறதோ, மறு உலக விசயத்தைப் பற்றி அறிய எதனை அறிந்தால் பெரும்பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிகரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ , அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்.
இவ்வாறு கட உபநிஷத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதி நிறைவு பெறுகிறது.
மூன்று வரங்கள் ஒருகண்ணோட்டம்
நசிகேதன்
உயர் உண்மைகளை நாடுபவர்களுக்கு நசிகேதன் கதை ஒரு கலங்கரை விளக்கம். அவர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள் நசிகேதனின் மூலம் வெளிப்படுத்தப் படுகின்றன.
முதலாவதாக சிரத்தை (2. தட்சிணைகள் எடுத்துச் செல்வதை குமாரன் நசிகேதன் கண்டான். சிரத்தை அவனை வந்தடைந்து. அவன் சிந்திக்கலான்) வெறும் நம்பிக்கைமட்டும் அல்ல, அந்த நம்பிக்கையை சாதிக்கின்ற செயல்திறன்.
இரண்டாவதாக சுய மதிப்பு (5. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறார் என்று சிந்தித்தான் நசிகேதன்.)தனது மதிப்பு நசிகேதனுக்கு நன்றாகத் தெரிந்ததிருந்தது. அதாவது, தன்னைப்பற்றி அவன் அறிந்திருந்தான். சிரத்தை மிக்கவனான எனக்கு சொல் என்று (13. எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையை பெறுகின்றனர். அங்கே அழைத்து செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல்ல. இதனை இரண்டாவது வரமாகக்கேட்கிறேன்.) அவன் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சிரத்தை உள்ளவர்களிடம் சொன்னால் அது வீண்போகாது. ஏனெனில் அதை அவர்கள் செயல்படுத்துவார்கள். தன்னால் செயல்படடுத்த முடிந்ததையே அவர்கள் கேட்பார்கள், கேட்டதை செயல்படுத்துவார்கள். நசிகேதன் சொல்லுகிறான், எமதரமன் சொல்வதைக் கடைபிடிக்கின்ற திறமை தன்னிடம் இருப்பதை உணர்திருந்தான் நசிககேதன். இதுவவேதான் சுயமதிப்பு என்பது.
அதுமட்டுமின்றி, செல்வம் பதவி பெண் என்று பலவிசயங்களை காட்டி திசைதிருப்ப எமதர்மன் முயற்சித்தபோது (இந்த இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன் நான்(27மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன் எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில் நான் ஆசை வைப்பேனா) என்று தைரியமாகக் கூறுகிறான் நசிகேதன். தன்னைப்பற்றி அவன் உயர்ந்த மதிப்பு வைத்திருந்தான் என்பதையே காட்டுகிறது.
சுயமதிப்பை ஆணவத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்டிக்கொள்வதும், பலவீனங்களை மறைப்பதற்காக போடும் முகமூடியே ஆணவம். சுயமதிப்பு என்பது தன்னிடம் இருப்பதைப் புரிந்து கொள்வது. ஆணவம் பிறரைக் கீழாகப் பார்கும், சுயமதிப்பு அனைவரையும் சமமாகப் பார்கும்.
எனவே தன்னறிவு (self knowledge) அதன் விளைவாக வருகின்ற சுயமதிப்பு இரண்டும் உயர்வாழ்கைக்கு மிகவும் இன்றியமையாது.
அடுத்தது உண்மையை ஏற்றுக் கொள்ளல் (openness to reality). வாசிரவஸ் நசிகேதனை மரண தேவனிடம் அனுப்பத் துணிந்த போதும் கோபமோ ஆத்திரமோ அடையாமல் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆழ்ந்து சிந்திக்கிறான் அவன். (5,. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறாா் என்று சிந்தித்தான் நசிகேதன். 6. முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்போது உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துபாருங்கள். செடி கொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.). சூழ்நிலை கொண்டு வருபவற்றை, அவை நல்லவையானாலும் கெட்டவையானாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உயர் உண்மையை நாடுபர்கள் ஒருபோதும் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யக் கூடாது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும், உடனே மனத்தை உள்ளே திருப்பி அதனை அக(body and mind) வளர்சிக்கான ஒரு படியாக மாற்றும் திறமைவேண்டும்.
அடுத்தது துணிச்சல் (10) எமனையே நேரே சந்திக்கும் துணிச்சலை நசிகேதனிடம் காண்கிறோம். பாதையில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனையும் எதிர்கொண்டு, தான் லட்சியமாக கொண்டதைச் சாதிப்பதற்கான துணிச்சல், உண்மையை நாடுபவர்களிடம் துணிச்சல்வேண்டும்.
கடைசியாக ஆசையின்மை(28.மரணதேவனே! எந்த விசயத்தில் இந்த சந்தேகம் நிலவுகிறதோ, மறு உலக விசயத்தைப் பற்றி அறிய எதனை அறிந்தால் பெரும்பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிகரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம். ) உயர் உண்மையை நாடுபவர்களிடம் உலகைப்பற்றிய, அதன் சுகபோகங்களைப் பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுடைய லட்சியத்தை அடைய முடியும். உலகம் அதன் சுககபோகங்கள் என்றால் என்ன? அவற்றிற்கு எந்தளவில் இடம் கொடுக்கவேண்டும், என்பது மிகமுக்கியமானது ஒன்று. உலகின் சுகங்கள் அத்தனையயையும் எமதர்மன் கொடுத்த பிறகும் நசிகேதன் அவற்றை உதறிவிட்டு, லட்சியத்திலேயே குறியாக இருக்கிறான். ஏனெனில் அந்த சுகபோகங்களின் நிலையாமையை அவன் சிந்தித்து அறிந்திருந்தான் (27. மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன் எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில் நான் ஆசை வைப்பேனா?). எனவே உண்மையை நாடுபவனுக்கு உலகின் கவர்ச்சிகள் எதனாலும் நிலைகுலையாத மனம் வேண்டும்.
மூன்று வரங்கள்
நசிகேதனின் முதல்வரம் தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. இது குடும்பத்தில் ஒரு நல்ல உறவு நிலவவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. பெற்றோருடனும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சரியான உறவு நிலவ வேண்டும்.
இரண்டாம் வரம் யாகம் பற்றியது. யாகங்களின் மூலம் இயற்கைை சக்திகளுடன் நாம் தொடர்புகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை இயற்கை சக்திகளின் மூலம் சாதித்துக் கொள்கிறோம். அதாவது, இயற்கையைப் பேணுதல், சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ நாம் கற்றிருக்க வேண்டும்.
மூன்றாம் வரம் உயர் உண்மையைப்பற்றியது.
குடும்பத்துடனும் சமுதாயாத்துடனும் இயற்கையுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டே உயர் ஆன்மீக உண்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இந்த மூன்று வரங்களும் நமக்கு காட்டுகின்றன.
No comments:
Post a Comment