Wednesday, 29 July 2020

உயிரும் ஆன்மாவும்

உயிரும் ஆன்மாவும்

உடம்பு, உயிர் (மனம் + பிராணன்) ஆன்மா என்று பலவற்றின் தொகுதியால் ஆனவன் மனிதன். இந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த அத்தியாயம் ஆராய்கிறது.



ஆன்மாவே இறைவன்

1. இந்த ஆன்மா என்று நாம் யாரை தியானிக்கிறோம் இருவரில் யார் ஆன்மா  யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மனங்களை முகர்கிறோமோ, பேசுகிறோமோ, இனிப்பு - கசப்பு என்று பகுத்தறிகிறோமோ அவரே ஆன்மா.

உலகின் இயக்கங்கள் கதிரவன் ஆல் நடைபெறுகின்றன. ஆனால் கதிரவன் எதிலும் நேரடியாக ஈடுபடுவது இல்லை. அவனது முன்னிலையில் அனைத்தும் நடைபெறுகின்றன. அதுபோல ஆன்மா ஒரு சாட்சியாக இருக்க உயிர் உலகின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.

முண்டக உபநிஷதம் ஓர் உவமையின் மூலம் இந்த கருத்தை விளக்குகிறது. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்ந்து வந்தன ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும் புளிப்பும் கசப்பும் பல்வேறு பலன்களை பழங்களைத் தின்பதும் அதன் காரணமாக இன்ப துன்பங்கள் மாறிமாறி அனுபவிப்பதுமாக இருக்கிறது. மற்றொரு பறவை எதையும் தின்னாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்த வண்ணம் இருக்கிறது. இங்கே அனுபவிக்கின்ற பறவை ஜீவனையும் மற்ற பறவை ஆன்மாவையும் குறித்து நிற்கிறது.


 பார்ப்பது கேட்பது போன்ற அனுபவங்கள் உயிருக்கு. ஆனால் பார்ப்பது கேட்பது போன்ற அனுபவங்களுக்கு ஆதாரமாய் இருப்பது ஆன்மா. அனைத்திற்கும் சாட்சியாக விளங்குகின்ற அதையே நாம் தியானிக்க வேண்டும் என்று இந்த மந்திரம் தெரிவிக்கிறது.

ஆன்மாவே ஆதாரம் 

2.அந்த ஆன்மாவே புத்தியாகவும் மனமாகவும் ஆகியிருக்கிறது. உணர்வு (),ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, உள்ளுணர்வு, மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, நிச்சய புத்தி, தீர்மானம், பிராணசக்தி, ஆசை, இன்ப நாட்டம், என்பவை ஆன்மாவின் பல பெயர்களாகும்.

பேருணர்பு பொருளான அனைதையும் கடந்ததாக இருந்தாலும் அனைத்துமாக விளங்குவதும் அதுவே. உடம்பின் இயக்கங்களாக, மனத்தின் இயக்கங்களாக, அந்த ஆன்மாவே திகழ்கிறது.

ஆன்மாவே இறைவன் 

3. பேருணர்வுப் பொருளான ஆன்மாவே படைப்புக் கடவுளாகவும், இதந்திரனாகவும், படைப்பின் தலைவராகவும், மற்றதேவர்கள் ஆகவும் உள்ளார். பூமி, காற்று, வெளி, தண்ணீர், நெருப்பு, ஆகிய ஐந்து அடிப்படை மூலங்களாக இருப்பதும் அவரே. சிறிய உயிரினங்களாகவும், விதைகளாகவும், இருப்பதும் அவரே. முட்டையில் தோன்றுபவை, கருப்பையில் தோன்றுபவை, வியர்வையில் தோன்றுபவை,விதையில் இருந்து முளைப்பவை அவை அனைத்தும் அவரே. குதிரைகள் பசுக்கள் மனிதர்கள் யானைகள் அனைத்தும் அவரே. நடப்பவை, பறப்பவை என்று அனைத்து உயிரினங்களும் அசையாத பொருட்களும் ஆன்மாவே. அனைத்தும் ஆன்மாவால் வழிநடத்தப்படுகின்றன, ஆன்மாவில் நிலைபெற்றுள்ளன. உலகமே ஆன்மாவால் வழி நடத்தப்படுகிறது. ஆன்மாவே அனைத்துக்கும் ஆதாரம். பேருணர்வுப் பொருளான அந்த ஆன்மாவே இறைவன். 

தனிநபர் நிலையில் ஆன்மா அனைத்துக்கும் ஆதாரம் என்று கூறியது. அதாவது உடல் உயிர் செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதாரமாக திகழ்வது ஆன்மா என்று அங்கே கண்டோம். பிரபஞ்ச நிலையில், பேருணர்வுப் பொருளான அந்த ஆன்மாவே, இறைவனாக  அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பதை இந்த மந்திரம் கூறுகிறது. உயிரினங்கள் கல், மண் போன்ற அசையா பொருட்கள் என்று பிரபஞ்சமாக விளங்குவது ஆன்மாவே. தனி நபர் நிலைில் ஆன்மாவாக மனிதனுள் உறைகின்ற அதே பொருள் தான் பிரபஞ்ச நிலையில் இறைவனாக, எங்கும் நிறைந்தவராக, அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளார்.

மரணமிலா நிலை

பேருணர்வுபொருளான ஆன்மாவே இறைவன் என்பதை அனுபூதியில் உணர்பவன் என்ன பெறுகிறான். என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.

4. பேருணர்வு பொருளான ஆன்மாவை உணர்பவன் (உடம்பு வீழ்ந்ததும்)  வெளியேறி சொர்க்கலோகத்திற்கு செல்கிறான். அங்கே எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெற்று, மரணமிலா நிலையை அடைகிறான். மரணமில்லா நிலையை அடைகிறான்.

ஆன்மாவை உணர்பவன் மரணமிலா நிலையை அடைகிறான். இவ்வாறு ஆன்மாவை உணர்கின்ற யாரும் மரணமிலா நிலையை  அடையலாம். என்பதை உணர்த்தி ஐதரேய உபநிஷதம் நிறைவுபெறுகிறது. 

No comments:

Post a Comment